Archive for the ‘கவிதைகள்’ Category

பெளதிகத்தின் தாக்கம்

பிப்ரவரி 28, 2009

பெளதிக நங்கை

கண்டேன்! நெற்றியிலே பொட்டு திருசியமாய்

காதினிலே ஊசல் எளிமை இசை இயக்கமாய்

கரங்களிலே சிலிங்கி குறுக்கலை இயக்கமாய்

நர்த்தனமாடிட நடந்தாள்

நல்ல நங்கை

 

கண்களிலே கரும்பொருள் கதிர்ப்பு

கைகளிலே இரண்டாம் நெம்பு

வாயினுள்ளே அடர்த்திக் குப்பி

விரல்களிலே வேணியர் இடுக்கி

சுமந்து வந்தாள் – அவள்

 

பேச்சினிலே பேணுாயி தேற்றம்

பார்வையிலே பஸ்காலின் தத்துவம்

அழகினிலே அம்பியர் ஓட்டம்

கொண்டிருந்தாள் அந்நங்கை – அவளே

என் பெளதிக நங்கை

                                                                                   வடிப்பு :- சுக்கிரன்

நான் கேட்ட துன்பக் கதை

பிப்ரவரி 20, 2009

அகதி முகாம்

உயிர் பிழைக்க எண்ணித் தங்கள்

உயிர்களை கைப் பிடித்து

உறவுகள் நடந்தது – நல்ல

உறைவிடம் காண எண்ணி

 

காததுாரம் நடந்ததன் பின்

கால்கள் இளைப்பாற அமர்ந்தது

அந்நியனின் கால்தடத்தில் – அவர்களுக்காய் 

அமைக்கப்பட்ட அகதி முகாம்

 

கால்களை தரையில் நீட்டி

கம்பத்தில் தலையை சாய்த்து

தாயக உணர்வுடன் – அவள்

தன் வாழ்க்கையை எண்ணினாள்

 

கதைப்பதை நிறுத்தியதில்லை, இங்கு

கதைப்பதற்கும் அனுமதி தேவை

காவலாளி இல்லை வீட்டில் – இங்கு

கழிப்பறைக்கும் கூட வருவான்

 

தனிமையாய் துாங்க எண்ணி

தனியறை கேட்டது அன்று

மண்டபத்தில் மக்கள் எல்லாம்

மந்தை போல் துாக்கம் இங்கு

 

எல்லை சற்று நகர்ந்து விட்டால்

மின்னலாய் சண்டை வெடிக்கும் – இங்கு

எல்லை தாண்ட முடியாது

மின்சாரம் உயிர் குடிக்கும்

 

மண்ணை விட்டு வந்ததனால்

மானம் இழந்தவள் ஆவேன் – நானோ

மண்ணில் இருந்திருந்தால்

மாவீரர் ஆயிருப்பேன்!

                                                               வடிப்பு :- சுக்கிரன்

காதலர் தின வாழ்த்துக்கள்

பிப்ரவரி 14, 2009

காதலர் தினம்

 

 

ஆதாம் ஏவால் முதல்

சாள்ஸ் டயானா ஈறாக

ஆண்டாண்டு காலமாய் கொண்டாடும்

சாத்வீக தினம்

 

மாசி ஈரேழை கொண்டாட

மாதங்கள் பல கணக்கிட்டு

பெற்றோரை மறந்து விட்டு

பெற்றவரைகாண ஏங்கும் தினம்

 

ரோஐா செடியில் – மலரை

துகிலுரிந்து எடுத்துச் சென்று

ரோசிக்கு கொடுப்பதனால்

துச்சாதனனாகும் கொடிய தினம்

 

பலஇளைஞர் மனம் திறந்து

பச்சை வண்ண ஆடையுடன்

காதலியை தேடி அலையும்

காதலின் புனித தினம்

                                                              வடிப்பு :- சுக்கிரன்

மலேசியாவில் கால்பதிக்கையில் எழுந்தது

பிப்ரவரி 7, 2009

கோலாலம்பூர்

வானளாவ கோபுரங்கள்

வான மலக்குகள் வந்து

வான்மழை தூவினாற் போல் – ஆங்கே

வண்ண வண்ண மின்குமிழ்கள்

 

கடுகளவும் சிந்திப்பின்றி

கடுகதியில் செல்லும் கார்கள்

கன்னியர்கள் காளையர்கள் பேதமின்றி

காற்சட்டையில் உலாவும் மனிதர்கள்

 

மணம் பரப்பும் குப்பைத்தொட்டிகள்

மானம் பறக்கும் காதலர்குடில்கள்

மலர்களை தூவும் கோயில்கள் – அருகே

மனிதரை தூவும் மயானங்கள்

 

மக்கள் தொகையில் பெரிதெனினும்

மனதளவில் சிறுத்துள்ள

மாக்கள் வசிக்கும் நகரம் – அதுவே

மாநரகம், கோலாலம்பூர் மாநகரம்

                                                                            வடிப்பு :- சுக்கிரன்

முதல் கவிதை

பிப்ரவரி 1, 2009

என் மன(ண)ப் பெண்

சுருள் முடியும் – அதில்

சுருட்டி விட்ட கொண்டையும்

நீண்ட நெற்றி தனில்

நீல நிறப் பொட்டும்

காதினில் கம்மலும் – கீழே

கழுத்ததனில் கதம்ப மாலையும்

அவள் யார்? என்றேன்

அவளை யாசிக்கத் தொடங்கிவிட்டேன்

 

இரண்டு விழிகளிலும்

இரேடியத்தின் ஓளிர்வு

செந்நிற கன்னமதனில்

செரிப்பழத்தின் செழிப்பு

காதினில் லோலாக்கு

காதலை பெருக்கிவிட

மனதைத் தொலைத்துவிட்டு – அவள்

மனம் தேடி அலைகின்றேன்

 

சிவப்பு நிறச் சட்டை

சிந்திப்பைத் தூண்டுகிறது

நீல நிறப் பாவாடை

நினைவுகளை மீட்டுகிறது

அவள் புன்சிரிப்பு

அன்பே வா! என்கிறது

அவள் தனங்களின் அழகில்

அவளுக்காய் தவமிருக்கும் தவசியாய் மாறிவிட்டேன்

 

சிற்றிடையாள் – அவள்

சிறுநடையாள்

குளவி மொழியாள் – அவள்

குலாப்ஜமூனாய் இனிப்பாள்

காதலியே என்

கற்கண்டே – இல்லறம்

கரும்பாய் இனித்திட

காந்தர்வ மணம் புரிவோமா?

                                                     வடிப்பு :- சுக்கிரன்