மலேசியாவில் கால்பதிக்கையில் எழுந்தது

கோலாலம்பூர்

வானளாவ கோபுரங்கள்

வான மலக்குகள் வந்து

வான்மழை தூவினாற் போல் – ஆங்கே

வண்ண வண்ண மின்குமிழ்கள்

 

கடுகளவும் சிந்திப்பின்றி

கடுகதியில் செல்லும் கார்கள்

கன்னியர்கள் காளையர்கள் பேதமின்றி

காற்சட்டையில் உலாவும் மனிதர்கள்

 

மணம் பரப்பும் குப்பைத்தொட்டிகள்

மானம் பறக்கும் காதலர்குடில்கள்

மலர்களை தூவும் கோயில்கள் – அருகே

மனிதரை தூவும் மயானங்கள்

 

மக்கள் தொகையில் பெரிதெனினும்

மனதளவில் சிறுத்துள்ள

மாக்கள் வசிக்கும் நகரம் – அதுவே

மாநரகம், கோலாலம்பூர் மாநகரம்

                                                                            வடிப்பு :- சுக்கிரன்

பின்னூட்டமொன்றை இடுக