நான் கேட்ட துன்பக் கதை

அகதி முகாம்

உயிர் பிழைக்க எண்ணித் தங்கள்

உயிர்களை கைப் பிடித்து

உறவுகள் நடந்தது – நல்ல

உறைவிடம் காண எண்ணி

 

காததுாரம் நடந்ததன் பின்

கால்கள் இளைப்பாற அமர்ந்தது

அந்நியனின் கால்தடத்தில் – அவர்களுக்காய் 

அமைக்கப்பட்ட அகதி முகாம்

 

கால்களை தரையில் நீட்டி

கம்பத்தில் தலையை சாய்த்து

தாயக உணர்வுடன் – அவள்

தன் வாழ்க்கையை எண்ணினாள்

 

கதைப்பதை நிறுத்தியதில்லை, இங்கு

கதைப்பதற்கும் அனுமதி தேவை

காவலாளி இல்லை வீட்டில் – இங்கு

கழிப்பறைக்கும் கூட வருவான்

 

தனிமையாய் துாங்க எண்ணி

தனியறை கேட்டது அன்று

மண்டபத்தில் மக்கள் எல்லாம்

மந்தை போல் துாக்கம் இங்கு

 

எல்லை சற்று நகர்ந்து விட்டால்

மின்னலாய் சண்டை வெடிக்கும் – இங்கு

எல்லை தாண்ட முடியாது

மின்சாரம் உயிர் குடிக்கும்

 

மண்ணை விட்டு வந்ததனால்

மானம் இழந்தவள் ஆவேன் – நானோ

மண்ணில் இருந்திருந்தால்

மாவீரர் ஆயிருப்பேன்!

                                                               வடிப்பு :- சுக்கிரன்

3 பதில்கள் to “நான் கேட்ட துன்பக் கதை”

  1. sukiran87 Says:

    good. keep it up

  2. மது Says:

    <>
    இதுக்கொண்டும் குறைச்சலில்லை நாட்டை விட்டு போன எல்லாரும் இதைத்தான் சொல்லுறது!!

  3. sathana Says:

    good poem

பின்னூட்டமொன்றை இடுக